தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரத் ஜோடா யாத்ரா: பிரியங்கா காந்தி, மெஹபூபா முப்தி பங்கேற்பு - INC

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ராவின் 134ஆவது நாள் பயணத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பாரத் ஜோடா யாத்ரா: பிரியங்கா காந்தி, மெஹபூபா முப்தி பங்கேற்பு
பாரத் ஜோடா யாத்ரா: பிரியங்கா காந்தி, மெஹபூபா முப்தி பங்கேற்பு

By

Published : Jan 28, 2023, 9:43 AM IST

புல்வாமா:தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா, 134ஆவது நாளை எட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள சுர்சுவில் இருந்து, இன்றைய யாத்திரை பயணம் தொடங்கியது.

இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின்போது பாம்பூரில் உள்ள பிர்லா இண்டர்நேஷனல் பள்ளி அருகே தேநீர் இடைவேளை எடுக்கப்படுகிறது.

தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் அருகே இரவு நேரத்தில் தங்குகின்றனர். இதனையடுத்து நாளை (ஜன.29) பந்தா சவுக்கில் இருந்து தொடங்கும் யாத்திரை, நேரு பார்க்கில் வைத்து பத்திரிகையாளர் சந்திப்புடன் முடிவடைகிறது. நாளை மறுதினம் (ஜன.30) நடக்கவுள்ள பேரணியில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க:மன்னிப்பு கூறவே 'ஹே ராம்' படம் எடுத்தேன்.. ராகுலிடம் விளக்கிய கமல்!

ABOUT THE AUTHOR

...view details