நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ், “நியூயார்க் நகரில் அடுத்தாண்டு (2023) முதல் தீபாவளி பண்டிகை அன்று பொதுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்” என அறிவித்தார். இதுகுறித்து பேசிய மாநில சட்டப்பேரவை உறுப்பினரான முதல் தெற்காசிய அமெரிக்கப்பெண் ஜெனிபர் ராஜ்குமார், “தீபத் திருநாளான தீபாவளியைக் கொண்டாடும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நியூயார்க் இந்து, பௌத்த, சீக்கிய மற்றும் சைன மதங்களை அங்கீகரிக்கும் நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். ஜெனிபர் ராஜ்குமாரின் உரையாடலுடன் கூடிய வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் மறுபதிவிட்டுள்ள பிரியங்கா, “இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு எனது இளமை கால குயின்ஸ் வாழ்க்கை கண்ணீர் துளிகளுடன் மகிழ்ச்சியை கொடுக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.