காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கோவிட்-19 தொற்று உயிரிழப்புகள் குறித்து முக்கியப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ”பிரதமரின் போலித் தனமான செயல்பாடுகள் பெரும் சேதாரத்தை ஏற்டுத்தியுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அரசு தனக்கென ஒரு ஏமாற்று இயந்திரத்தை உருவாக்கி அதின் மூலம் போலி கருத்துகளைப் பதிவிட்டு அதன் மூலம் உண்மையை மறைத்து வருகிறது.
இதன்மூலம் உலகம் கண்டிராத பெருந்தொற்றிலும் கூட உண்மையை மறைத்து போலி செய்திகளைப் பரப்பும் வேலையை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நாட்டில் பரிசோதனை, தொற்று பாதிப்பு எண்ணிக்கை, உயிரிழப்பு உள்ளிட்டவற்றை மிகவும் குறைத்துக் காட்டுகிறது. நதிகளில் மிதக்கும் பிணங்களே இதற்கு சாட்சி.
தடுப்பூசி திட்டத்திலும் இதே போன்று ஏமாற்று வேலையை பாஜக அரசு செய்து வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், அதிக தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம் எனத் தம்பட்டம் அடித்து வருகிறது” என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க:வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பிய 90 லட்சம் இந்தியர்கள்