ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர் பளு தூக்கும் போட்டியில், கலந்துகொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு நேற்று (ஜூலை24) வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து யாரேனும் தங்கம் வென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என பலர் எதிர்ப்பார்த்த நிலையில், பிரியா மாலிக் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற செய்தி காட்டு தீயென பரவியது.
எதையும் நம்பும் தேசப்பற்று!
மனம் எனும் மாயை, தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களை, எவ்வித பகுத்தறிவுமின்றி உடனே ஏற்கும். தாய்நாட்டிற்கு தங்கம் வெல்லும் செய்தியை கேட்க துடித்த இந்தியர்கள் பிரியா மாலிக் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதாக உடனே நம்பினர்.
ஆனால் பிரியா மாலிக், ஹங்கேரியில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில்தான் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார்.