தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தனியார் துணிக்கடை காவலாளிக்கு அரிவாள் வெட்டு : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - புதுச்சேரி மாநில குற்றச் செய்திகள்

புதுச்சேரி : அண்னா சாலையிலுள்ள தனியார் துணிக்கடை முன்பு உறங்கிக் கொண்டிருந்த காவலாளியை அரிவாளால் வெட்டிய நபர்களை சிசிடிவி காட்சியைக் கொண்டு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அரிவாளால் வெட்டும் இளைஞர்கள்
அரிவாளால் வெட்டும் இளைஞர்கள்

By

Published : Nov 3, 2020, 1:11 AM IST

புதுச்சேரி அண்ணா சாலையில் ‘ஓம் சக்தி’ என்னும் மொத்த விற்பனை துணிக்கடை அமைந்துள்ளது. இந்த ஜவுளிக் கடை முன்பாக நேற்று (நவ.02) நள்ளிரவு காவலாளி முத்து குமாரசாமி படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது சுமார் இரண்டு மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சுதாரித்து எழுந்த காவலாளி, சிறு காயங்களுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் காவலாளியை வெட்டும் காட்சி பதிவாகியிருந்தது.

காவலாளிக்கு அரிவாள் தாக்கும் காட்சி

இந்தக் காட்சிகளின் அடிப்படையில், காவலாளியை அரிவாளால் தாக்கிய இளைஞர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்பத் தகராறில் அக்கா கணவரை கொலை செய்த தம்பி

ABOUT THE AUTHOR

...view details