ஆந்திரா: சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளி - திருப்பதி நெடுஞ்சாலையில் நேற்றிரவு (மார்ச் 26) தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. முதல்கட்ட தகவலில், அதிவேகமாக சென்றதால் வளைவில் திரும்ப முடியாமல் பேருந்து பள்ளத்தில் விழுந்து கவிழந்தது தெரியவந்தது. 63 பேர் பயணித்த அந்த பேருந்தில் ஒரு பெண், ஒரு சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்தில், மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் ஆறு பேரின் சடலத்தை மீட்டுள்ளனர். நாரவரிப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அந்த எட்டு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உயிரிழந்தவர்கள் மலிஷெட்டி வெங்கப்பா (60), மலிஷெட்டி முரளி (45), கந்தம்மா (40), மலிஷெட்டி கணேஷ் (40), ஜெ.யஷஸ்வினி (8), ஓட்டுநர் நபி ரசூல், ஓட்டுநரின் உதவியாளர் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், பேருந்தில் இருந்த மணமக்கள் உள்பட மொத்தம் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.