பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வாட்ஸ் அப் பயனாளர் கொள்கை 2016 வகுக்கப்பட்டது. அதற்கு எதிராக, கர்மண்யா சிங் சரீன், ஸ்ரேயா சேத்தி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்த தடை விதிக்க கோரி அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு, பேஸ்புக், வாட்ஸ்அப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.