தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமரின் முதன்மை ஆலோசகர் ராஜினாமா! - பி கே சின்ஹா

டெல்லி: பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே. சின்ஹா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பி கே சின்ஹா
பி கே சின்ஹா

By

Published : Mar 16, 2021, 8:23 PM IST

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே. சின்ஹா, தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமைச்சரவைச் செயலாளரான சின்ஹா, கடந்த 18 மாதங்களாக பிரதமர் அலுவலகத்தில் முதன்மை ஆலோசகராகப் பொறுப்பு வகித்துவருகிறார்.

மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சின்ஹா, திடீரென பதவி விலகியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அமைச்சரவைச் செயலாளராக இருந்தபோது அவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு அமைச்சரவைச் செயலாளராக இருந்த அவர் ஓய்வுபெற்றார். பிரதமர் அலுவலகத்தில் சின்ஹாவை சேர்த்துக்கொள்வதற்காக முதன்மைச் செயலாளர் என்ற பதவி பின்னர் உருவாக்கப்பட்டது.

பிரதமரின் பதவிக்காலம் வரை, சின்ஹா முதன்மைச் செயலாளராக நீடிப்பார் என நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசின் மூத்த ஐஏஎஸ் அலுவலர்களில் ஒருவரான சின்ஹா, அமைச்சரவைச் செயலாளராக நான்கு ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்தார்.

ABOUT THE AUTHOR

...view details