தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"ஜனநாயக திருவிழாவான 2024 தேர்தலை காண வாருங்கள்" - பிரதமர் மோடி அழைப்பு! - ஜி20 சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு

2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனநாயகத்தின் தாயான இந்தியாவின் பொதுத் தேர்தலை காண வருமாறு ஜி20 பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

Modi
Modi

By

Published : Jun 21, 2023, 4:28 PM IST

பனாஜி :ஜனநாயகத்தின் திருவிழாவான 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை காண வருமாறு ஜி20 பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

நடப்பு ஆண்டுக்கான ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பையேற்று இந்தியா வழிநடத்துகிறது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், ஜி20 சுற்றுலா அமைச்சர்களுக்கான மாநாடு கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளிடையே இணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் திறன் சுற்றுலாத் துறை கொண்டு உள்ளதாக கூறினார். தீவிரவாதம் பிரித்தாழும் திறன் கொண்டு இருப்பதாகவும், அதேநேரம் சுற்றுலா ஒன்றுபடும் கொள்கையை கொண்டு இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

நாட்டின் அடுத்த பொதுத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், ஜனநாயகத்தின் தாய் மற்றும் ஜனநாயகத்தின் திருவிழாவை காண ஜி20 பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருப்பதால், இந்த திருவிழாவை அதன் பன்முகத்தன்மையுடன் காண இடப் பற்றாக்குறை இருக்காது என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க :அமெரிக்க கட்டுரையாளர் நாசிம் நிக்கோலஸ், எழுத்தாளர் ராபர்ட் தர்மனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

ஜி 20 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார், மேலும் வியக்கத்தக்க இந்தியாவிற்கு அனைவரையும் வரவேற்பதாக கூறிய பிரதமர் மோடி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகத்தால் வியத்தகு இந்தியா என நடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு சுற்றுலா வருவது என்பது வெறும் சுற்றிப் பார்ப்பதற்கான நோக்கமாக மட்டுமல்லாமல், அது ஒரு அற்புதமான அனுபவம் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், இந்தியாவில் விருந்தினர்கள் கடவுளாக மதிக்கப்படுகிறார்கள் அதை அதிதி தேவோ பவ என்று குறிப்பிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்தியாவில் சுற்றுலாவின் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் மேம்படுத்துவதில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது என்றார். சுற்றுலாத் துறையை சீர்திருத்தங்களின் மைய புள்ளியாக வைத்து உள்ளதாகவும், ஜி20 அமைச்சர்கள் மற்றும் பிற பிரதிநிதிகள் கோவாவின் இயற்கை அழகு மற்றும் திருவிழாக்களை கண்டுகளிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

சுற்றுலாத் துறையில் இந்தியாவின் முயற்சிகள், சுற்றுலாவுக்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கும் அதே வேளையில், அதன் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மையமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க :"யோகாவை பிரபலப்படுத்தியதில் நேருவுக்கே முக்கியப் பங்கு" - காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details