குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆயிரத்து 182 வார்டுகளில் வெற்றிபெற்று பாஜக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இரண்டாவது இடத்திலுள்ள காங்கிரஸ் 214 இடங்களிலும் சுயேச்சைகள் 73 இடங்களிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்னன. ஆம் ஆத்மி இரண்டு இடங்களையும் பகுஜன் சமாஜ் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜக 382 இடங்களையும் காங்கிரஸ் 84 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. சுயேச்சை, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் ஆகியவை தலா இரு இடத்தில் வெற்றபெற்றுள்ளன. தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் ஆயிரத்து 636 இடங்களில் பாஜகவும் 625 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.