தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமருக்கு கடிதம் எழுதிய 4ஆம் வகுப்பு மாணவி : உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு

கேரள மாநிலம், கலக்கம் ஆறு அருகே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி
பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி

By

Published : Dec 27, 2020, 3:52 PM IST

Updated : Dec 27, 2020, 4:02 PM IST

திருவனந்தபுரம் :கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் அருகேயுள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி எம்.ஆர்.அதுல்யா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரமதர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "எங்களது கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலக்கம் ஆற்றினைக் கடந்து தான் பள்ளி, கோயில், சந்தை ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியும். முறையான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், ஆபத்தான முறையில் ஆற்றினைக் கடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

2019ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது எங்கள் கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் மழைக் காலங்களில் டவுன் பகுதிக்குச் செல்வதிலும் கடும் சிக்கல் நிலவுகிறது. எனவே கலக்கம் ஆற்றினை பாதுகாப்பாக கடக்கும் வகையில் பாலம் கட்டித்தர வேண்டும்" எனக் குறிப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மாணவியின் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பிரதமர் அலுவலகம், பாலம் கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க, மாநில அரசு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து பஞ்சாயத்து அலுவலர்கள் ஜே.எஸ்.ஜலீல், பிஜி ஆகியோர் கலக்கம் ஆற்றினையும், அதனை சுற்றியுள்ள கிராமத்தையும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளனர். சிறுமியின் கடிதத்தின்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டதாக பஞ்சாயத்து செயலரும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எளிதில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றைப் பெற முடியாத சூழலில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது மகள் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக அச்சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காதல் மனைவிக்கு திருமணப்பரிசாக நிலவில் இடம்... அசத்தும் இந்தியக் கணவர்!

Last Updated : Dec 27, 2020, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details