டெல்லி: கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து பரிக்ஷா பே சர்ச்சா(pariksha pe charcha)என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி டெல்லியில் டால்கோடரா மைதானத்தில் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதுமிருந்து 30 லட்சம் மாணவர்கள், 20 லட்சம் கேள்விகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.டெல்லியில் நேரடியாகவும், நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் காணொளி வாயிலாகக் கேட்கும் கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளித்தார்.
அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்தியாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரதமர் மோடியிடம் பேசினார். "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு வணக்கம், என் கேள்வி என்னவென்றால், நான் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டால் எனது பெற்றோரை நான் எப்படி சமாளிப்பது? சமூகத்தில் உள்ளவர்களும் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களைக் குறைகூறுவதால் பல கைகளை துண்டிக்கும் அளவுக்கு கூட செல்கின்றனர். மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் நல்ல மாணவர்களாகத் திகழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?" என்று கேள்வி எழுப்பினார்.