தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிதாக 91 எப்.எம் டிரன்ஸ்மீட்டர்கள் பிரதமர் மோடி துவக்கி வைப்பு - ஒன்று கூட தமிழகத்தில் இல்லை! - Modi inagurate FM transmitters

வாணொலி இணைப்பை மேம்படுத்த புதிதாக 91 வானொலி ஒலிபரப்பை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

PM Modi
PM Modi

By

Published : Apr 28, 2023, 12:34 PM IST

டெல்லி : வானொலி ஒலிபரப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் 91 எப்.எம். டிரான்ஸ்மீட்டர்களை காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 2 யூனியன் பிரதேசங்கள் உள்பட நாட்டின் 18 மாநிலங்களில் உள்ள 84 மாவட்டங்களில் இந்த நவீன 100 வாட் எப்.எம் டிரான்ஸ்மீட்டர் ஒலிபரப்பை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடு முழுவதும் வானொலி ஒலிபரப்பை மேம்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக 2 யூனியன் பிரதேசம் உள்பட 18 மாநிலங்களில் உள்ள 84 மாவட்டங்களில் அதநவீன எப்.எம். டிரான்ஸ்மீட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் எல்லையோர பகுதிகள் மட்டும் குக்கிராமங்களில் கூட ஆல் இந்தியா ரேடியோவின் குரல்களை ஒலிக்கச் செய்ய முடியும் எனக் கூறப்பட்டு உள்ளது. பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலாயா, நாகாலாந்து, அரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, லடாக் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசம் மற்றும் மாநிலங்களில் இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 13 இடங்களிலும், குஜராத்தில் பத்து இடங்களிலும், பீகாரில் 9 இடங்களிலும் என இந்த வானொலி ஒளிபரப்பு சேவை தொடங்கப்படுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்த ஆல் இந்தியா ரேடியாவின் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 2 கோடி பேருக்கு புதிய ஊடகத் தொடர்பு ஏற்படுத்தப்படும் என்றும் அதேபோல் 35 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், எப்.எம். சேவையும் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் நாடு முழுவதும் 84 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த சேவை தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட தொடங்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் இருக்கும் போது கூட தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட இந்த வானொலி ஒளிபரப்பு சேவை செயல்படுத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் வானொலி ஒளிபரப்பு முழுமையாக கிடைக்கப் பெறாத கிராமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் எந்த வித தமிழ் வானொலி ஒளிபரப்பும் அப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல நாமக்கல், கும்பகோணம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வானொலி ஒளிபரப்பு சேவை இன்றளவும் தெளிவாக கிடைக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கம் போலவே மத்திய அரசு திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதா என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க :Karnataka Elections 2023 : ரூ.25 ஆயிரத்துக்கு வாக்காளர்கள் தகவல் விற்பனை! பகீர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details