கரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.