ரோம் (இத்தாலி): பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள அக்.29ஆம் தேதி இத்தாலி புறப்பட்டு சென்றார். இந்தக் கூட்டம் நாளை (அக்.31) வரை நடக்கிறது.
கடந்த ஆண்டு கோவிட் பரவல் காரணமாக ஜி20 மாநாடு காணொலி வாயிலாக சௌதி அரேபியாவில் நடைபெற்றது. இந்நிலையில், மோடி எட்டாவது முறையாக ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். உலகப் பொருளாதாரம், உலகளாவிய ஆரோக்கியம் குறித்த G20 தொடக்க அமர்வில் பிரதமர் மோடி நாளை பங்கேற்கவுள்ளார்.
இம்மாநாட்டைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.