டெல்லி:சீனாவில் BF.7 என்ற உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1.48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் குஜாராத்தில் இருவர், ஒடிசாவில் ஒருவருக்கு BF.7 புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று மாலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.