டெல்லி:நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை (நவம்பர் 29) தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் நரேந்திர மோடி மத்தியில் ஆளும் பாஜக அரசு, 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்படாத மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தக் கூட்டத்தொடரில், மிக முக்கியமாக மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா, கிரிப்டோகரன்சியை ஒழுங்குப்படுத்தும் மசோதா, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் பங்குகளைக் குறைக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்டவற்றை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.
இந்நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரை ஒட்டி நாளை காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடக்கிறது. இதற்கு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.