தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

Farm Laws
Farm Laws

By

Published : Nov 19, 2021, 9:21 AM IST

Updated : Nov 19, 2021, 11:41 AM IST

10:03 November 19

வேளாண் சட்டங்களைத் (Farm Laws) திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ள நரேந்திர மோடி, உழவர் தங்களது போராட்டத்தினைக் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

டெல்லி:ஒரு ஆண்டிற்கு மேலான உழவரின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக மூன்று வேளாண் சட்டங்களும் (Farm Laws) திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும், அவர் டெல்லி எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உழவர் போராட்டத்தைக் கைவிட்டு தங்களது வீடுகளுக்குத் திரும்புமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

10:03 November 19

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

எவ்வளவோ முயன்றும் சில உழவருக்கு வேளாண் சட்டங்களின் (Farm Laws) நன்மைகளைப் புரியவைக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்த நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற முடிவுசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'வேளாண் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை விவசாயிகள் படிக்கவேண்டும்' - பிரதமர் மோடி

வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களையும் (Farm Laws) ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதற்கான அரசமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

09:20 November 19

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

இது குறித்து அவர் மேலும் கூறியவை:

  • உழவருக்குச் சேவை செய்வதே அரசின் தலையாய இலக்கு. சிறு உழவரின் நலன்களுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்.
  • நாட்டின் உழவரில் 80 விழுக்காட்டினர் சிறு உழவராகவே இருக்கின்றனர். 2014ஆம் ஆண்டு முதல் உழவரின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவருகிறது.
  • மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருள்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தரமான விதைகள், உரங்கள் உழவருக்கு கிடைப்பதை அரசு உறுதிசெய்துள்ளது.
  • உழவரின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களும் (Farm Laws) கொண்டுவரப்பட்டன. இந்த வேளாண் சட்டங்கள் சிறு உழவரின் நலன்களை மேம்படுத்துவதற்கானவை.
  • குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியதோடு சாதனை அளவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • குருநானக்கின் பிறந்தநாளன்று உழவர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்.

இதையும் படிங்க: விவசாயிகள் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்

Last Updated : Nov 19, 2021, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details