போபால் : பிரதமர் மோடி முதல் முறையாக ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் சேவையை நேரடி மற்றும் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலாபடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 5 வந்தே பாரத் ரயில்களின் சேவையை துவக்கி வைத்தார். ராணி கமலாபடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
போபால் மாவட்டம் ரானி கமலாபடியில் இருந்து ஜபல்பூர் வரை, கஜுராஹோ - போபால் - இந்தூர் வரை, மட்கான் (கோவா) - மும்பை வரை, தார்வாட் - பெங்களூரு வரை, மற்றும் ஹதியா - பாட்னா இடையிலான 5 வந்தே பாரத் விரைவு ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதில் ராணி கமலாபடியில் இருந்து ஜபல்பூர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மகாகவுஷல் பகுதியுடன் சேர்த்து மாநிலத்தின் மத்திய பகுதியான போபாலுடன் இணைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.