தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள்: பிரதமர் வாழ்த்து - பாரா ஒலிம்பிக் 2020

பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கங்கள் வென்று கொடுத்த இரண்டு பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து
பிரதமர் வாழ்த்து

By

Published : Sep 4, 2021, 10:17 AM IST

பாரா ஒலிம்பிக் 2020 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24ஆம் தொடங்கி நாளை (செப்டம்பர் 5) வரை நடைபெறுகிறது. இதில் 11ஆவது நாளான இன்று (செப்டம்பர் 4) துப்பாக்கிச்சுடுதல் பி4 கலப்பு 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் முறையே தங்கம், வெள்ளி விருதுகளை வென்றுள்ளனர்.

ஒரே பிரிவில் போட்டியிட்டுத் தங்கப் பதக்கத்தை மணீஷ் நர்வால் என்ற வீரரும், வெள்ளியை சிங்ராஜும் கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்குப் பதக்கம் வென்று கொடுத்த இவர்களுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நரேந்திர மோடியும் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், "சிங்கராஜ் மீண்டும் சிறப்பான செயலைச் செய்துள்ளார். கலப்பு 50 மீ பிஸ்டல் பிரிவில் போட்டியிட்டு அவர் மற்றொரு பதக்கத்தை வென்றுள்ளார். அவரது சாதனையால் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. அவருக்கு வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், "இளமையான, திறமையான மனீஷ் நர்வால் சிறப்பாகச் சாதனை படைத்துள்ளார். மனீஷ் தங்கப் பதக்கம் வென்றது இந்திய விளையாட்டுக்கு ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:இந்தியா பதக்க வேட்டை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெள்ளி

ABOUT THE AUTHOR

...view details