ஹைதராபாத்:நாடெங்கும் உள்ளவர்கள் உற்றுநோக்கிய கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று (மே.13) வெளியாகின. வரும் 2024 மத்தியில் ஆளும் பாஜகவும், அகில இந்திய காங்கிரஸுக்கும் இந்த தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் வெற்றி காங்கிரஸிற்கே தீர்மானிக்கப்பட்டது என்பதை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் தெரியவந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் இதுவரை இல்லாத இமாலய வெற்றியை கர்நாடக காங்கிரஸ் பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது.
கர்நாடக தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் இதுவரையில் காங்கிரஸ் 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமான இடங்களில் அதிகமான வாக்குகள் பெற்று காங்கிரஸ் சாதனை பெற்றுள்ளது. தற்போது இந்த தேர்தலில் பெற்ற வாக்குகளின் படி, முந்தைய 43 சதவீதத்தைக் கடந்து 43.7 சதவீத வாக்குகளுடன் தனது பலத்தை காட்டியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் இமாலய வெற்றிபெற்ற காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பிற அரசியல் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். "பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்திரா காந்திக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும் ComeBack கொடுத்த தொகுதி! எது தெரியுமா?