குஜராத் மாநிலம் அகமதாபாத் பிரானா-பிப்லாஜ் சாலையில் உள்ள குடோனில் இன்று (நவ.04) தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால், குடோன் சுவர்கள் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, எல்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.