தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரா ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் வாழ்த்து! - வெள்ளிப் பதக்கம்

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

மோடி வாழ்த்து
மோடி வாழ்த்து

By

Published : Sep 3, 2021, 9:19 AM IST

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி வரும் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், 10 ஆவது நாளான இன்று (செப்.03) 64 அடி உயரம் தாண்டுதலில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன் குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது இந்தியா 11 பதங்கங்களுடன் 36ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த இவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது கடின உழைப்பு, ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவாக இந்தப் பதக்கம் கிடைத்திருக்கிறது. பிரவீன் குமாருக்கு வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details