டெல்லி:டோக்கியோவில் நடைபெற்றுவெரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிவென்றுள்ளார். இவரின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "வெள்ளி வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவை பாராட்டுகிறேன். அவரின் சாதனையால் இந்தியா பெறுமை கொள்கிறது. அவரது சாதனை மேலும், மேலும் உயரும்" என குறிப்பிட்டுள்ளார்.