புதுச்சேரி மாநில முதலமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றார். டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, உள்பட பலரை சந்தித்து பேசினார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர், மத்திய நிதி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சி குறித்து பேசினேன். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.