தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் கோயில் பூசாரி சுட்டுக்கொலை - Temple priest killed in Bihar

பிகார் மாநிலத்தில் கோயில் பூசாரி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் கோயில் பூசாரி சுட்டுக்கொலை
பிகாரில் கோயில் பூசாரி சுட்டுக்கொலை

By

Published : Jul 21, 2022, 5:38 PM IST

பாட்னா:பிகார் மாநிலம் மோதிஹரியின் குந்த்வா செயின்பூர் பகுதியில் உள்ள கோயில் பூசாரி சுரேஷ் சிங் என்பவர் இன்று (ஜூலை 21) சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அப்பகுதி போலீசார் தரப்பில், சுரேஷ் சிங் பிற்பகல் கோயிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்தோம். ஆனால், பொதுமக்கள் உடலை தர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

பாதுகாப்பு கருதி கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பக்தரின் தங்கத்தாலான பூஜை சாமான்களை திருடிய கோயில் பூசாரி கைது!

ABOUT THE AUTHOR

...view details