அனந்தபூர் :ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்தஞ்சேர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தசாய்னா. கோயில் அர்ச்சகரான இவருக்கு, ஸ்ரவந்தி என்பவருடன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனால், சென்ற ஏழு ஆண்டுகளாக மனம் மற்றும் உடல் ரீதியாக மனைவி ஸ்ரவந்தியை, அனந்தசாய்னா துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ஆறு மாதங்களாக கோயிலுக்கு வரும் பல இளம்பெண்கள் மற்றும் பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய உறவுகளை அனந்தசாய்னா வைத்து வந்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகளையும் வைத்து இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி அவரைக் கண்டித்துள்ளார்.