இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, நாடு சுதந்திரம் பெற்று 75ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக 'ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' என்ற பெயரில் நடைபெற்ற முதல் கூட்டத்தை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தினார்.
'சனாதன இந்தியாவின் பெருமையை 75ஆவது சுதந்திர தினம் பிரதிபலிக்கும்' - பிரதமர் மோடி - பிரதமர் மோடி
டெல்லி: "75ஆவது சுதந்திர தினம் சனாதன இந்தியாவின் பெருமையை பிரதிபலித்து சுதந்திர போராட்டத்தின் உணர்வுகளை கொண்டாடும் விதமாக அமையும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதில் பேசிய மோடி, "இந்தாண்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் சுதந்திர போராட்டத்தின் ஆன்மாவையும் தியாக உணர்வையும் பிரதிபலிக்கவுள்ளது. உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு நாட்டின் கனவுகளை கட்டமைக்க உறுதி கொள்ள வேண்டும்.
சனாதன இந்தியா எப்படி இருந்தது, நவீன இந்தியா என்பது மிளிர்கிறது என்பது குறித்த பார்வையையும் அது பிரதிபலிக்கும். 130 கோடி இந்தியர்களுடன் ஒன்றிணைந்து 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும். பொது மக்களின் பங்கேற்பை அடிப்படையாக வைத்தே இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது" என்றார்.