ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே உள்ள மஸ்தூரி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான பன்வார் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் விலை உயர்ந்த கிரானைட் கற்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை நேற்றிரவு (ஆகஸ்ட் 25) திருடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை திருட்டு - சத்தீஸ்கரில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை திருடப்பட்டுள்ளது.

இதனையறிந்த கோயில் பூசாரி, பிலாஸ்பூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சிலை 3 அடி உயரமும், 65 கிலோ எடையும் கொண்டது. பல லட்சம் மதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்திக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவந்த நிலையில் சிலை திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த கிராம மக்கள் கோயிலில் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றனர். இதனிடையே போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க:பேப்பர்களை கொண்டு 4.5 அடி உயரத்தில் விநாயகர் சிலையினை உருவாக்கி அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்