இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ். திமையாவுக்கு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள மடிகேரியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்டு அருங்காட்சியத்தை திறந்துவைக்க ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா மற்றும் ஜெனரல் திம்மையா மன்றத்தின் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ராணுவத் தலைவரின் அருங்காட்சியகத்தை திறந்துவைக்கும் குடியரசுத் தலைவர்!
பெங்களூரு: முன்னாள் ராணுவத் தலைவர் கே.எஸ். திமையாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 6 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா மற்றும் ஜெனரல் திம்மையா மன்றத்தின் தலைவர் ஒய்வுப்பெற்ற கர்னல் கே.சி.சுப்பய்யாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் செயலாளர் எழுதிய கடிதத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் "முன்னாள் ராணுவத் தலைவர் கே.எஸ். திமையாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை பிப்ரவரி 6ஆம் தேதி திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவார்" என்று எழுதியுள்ளார்.
மார்ச் 31, 1906 இல் பிறந்த கோடேரா சுபையா திமையா 1957 முதல் 1961 வரை ராணுவப் பணியாளர்களின் தலைவராக இருந்தார். அவர் டிசம்பர் 17, 1965 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.