தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிபின் ராவத், குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் - பத்ம விருது வழங்கும் விழா

இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. மொத்தம் 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிபின் ராவத், குலாம் நபி அஷாத்துக்கு பத்ம பூஷன் - பத்ம விருது வழங்கும்  விழா
பிபின் ராவத், குலாம் நபி அஷாத்துக்கு பத்ம பூஷன் - பத்ம விருது வழங்கும் விழா

By

Published : Mar 21, 2022, 11:07 PM IST

டெல்லி:குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (மார்ச் 21) குடியரசுத் தலைவர் மாளிகையில் 128 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார். இதில், நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ என பல துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 128 விருதுகளில் 34 விருதுகள் பெண்களுக்கும், 13 விருது உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் 10 விருது வெளிநாட்டினருக்கும் வழங்கப்பட்டது.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத்திற்கு (குடிமைப்பணி), பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்தவர்களுக்கான விருதை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். மறைந்த பிபின் ராவத்தின் மகள் கிருத்திகா ராவத் விருதை பெற்றுக் கொண்டார்.

பத்ம பூஷனை பெற்று கொண்ட குலாம் நபி ஆஷாத்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி அஷாத் பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

பத்ம விருதுகள் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகும். அவை ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. இது அனைத்து துறைகளிலும் உள்ள சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு விருதாகும். இது இலக்கியம் மற்றும் கல்வி, கலை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், சிவில் சேவைகள், பொது விவகாரங்கள், விளையாட்டு மற்றும் மருத்துவம் போன்ற களங்களை உள்ளடக்கியது. பத்ம விருதுகள் பரிந்துரை குழுவின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க:சௌக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது - நன்றி தெரிவித்து நடிகர் நாசர் அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details