டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்பில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகப் பரிசோதனை செய்துகொள்வதற்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் மருத்துவமனையில் அனுமதி! - ராம்நாத் கோவிந்த்
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்பில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வெளியான அறிக்கையில், "வழக்கமான பரிசோதனை செய்துகொள்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். தற்போது, மருத்துவர்கள் அவரின் உடல்நிலையைக் கண்காணித்துவருகின்றனர். அவரின் உடல்நிலை சீராக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "குடியரசுத் தலைவரின் மகனிடம் பிரதமர் பேசியுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக பிரார்த்தனை மேற்கொள்வதாகப் பிரதமர் தெரிவித்தார்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.