இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், "மாசு இல்லாத, தூய்மையான தீபாவளியைக் கொண்டாடி இயற்கை தாயை அனைவரும் காக்க வேண்டும். பல்வேறு மதங்கள் மற்றும் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் கொண்டாடும் இந்த திருவிழா நம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை, நல்லெண்ணம், சகோதரத்துவ உணர்வை பலப்படுத்துகிறது.
'ஓர் விளக்கு பல விளக்குகளை ஒளிர செய்வது போல, ஏழை, எளிய மக்களின் வாழ்வை ஒளிர உதவுங்கள்' - ராம்நாத் கோவிந்த்
டெல்லி: தீபாவளி நாளன்று ஒரு விளக்கு அதன் ஒளியைப் பகிர்வதன் மூலம் பல விளக்குகளை ஒளிரச் செய்வது போலவே மக்கள் அனைவரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்த சந்தர்ப்பத்தில், ஒரு விளக்கு அதன் ஒளியைப் பகிர்வதன் மூலம் பல விளக்குகளை ஒளிரச் செய்வது போலவே, நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஏழை, ஆதரவற்ற மக்களுக்கு உதவ வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மிலாடி நபி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர்!