ஐபிஎல் தொடரில் இன்று இறுதி லீக் ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கிய ஐபிஎல் தொடரில் , பிளே ஆஃப் சுற்றுக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் , சஞ்சு சாம்ஸன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முன்னேறி விட்ட நிலையில் , இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான ஆட்டம் சம்பிரதாயமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
நடப்புத்தொடரில் இது கடைசி ஆட்டம் என்பதால், இரு அணிகளும் வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்பில் உள்ளனர். இரு அணிகளும் 13 ஆட்டங்களில் விளையாடி 6இல் வெற்றி கண்டு 7ஆவது மற்றும் 8ஆவது இடத்தில் உள்ளனர். இதனிடையே தனது இரண்டாவது குழந்தை பிறப்புக்காக கேன் வில்லியம்ஸன் நியூசிலாந்து சென்றுவிட்டதால், ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளார்.