டெல்லி: 15ஆவது இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று (ஜூலை18) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்னாள் ஜார்க்கண்ட் கவர்னர் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார். அவரை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் ஓட்டளித்தார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினை செலுத்தினார். மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்து வருகின்றனர்.
Presidential Polls: நாடாளுமன்றத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) தொடங்கி, ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவையிலும், டெல்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேச சட்டப்பேரவையிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநில முதலமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 18) காலை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 18) காலை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து தலைமை செயலகம் சென்ற ஸ்டாலின், அங்கு மு.க.ஸ்டாலின் முதல் நபராக தனது வாக்கை செலுத்தினார்.
குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜுலை 21ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் புதிய குடியரசு தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவின் 15-ஆவது குடியரசு தலைவர் யார்? இன்று வாக்குப்பதிவு ...