புதுடெல்லி: நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18 அன்று நடைபெற்றது. இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 1,349 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேநேரம் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 537 வாக்குகளைப் பெற்றுள்ளார்.