குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் நிலையில் , பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும் , எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
குடியரசு தலைவர் தேர்தல் - யஷ்வந்த் சின்ஹாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு - Yashwant Sinha
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி கட்சிகள் ஒருமனதாக தேர்வு செய்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலுங்கானாவின் முதல்வரும் , ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இரு வேட்பாளர்களும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்தும் , தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலங்கானாவின் முதல்வரும், ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த போது , ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரான ராமா ராவ் உடனிருந்தார்.