தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தஞ்சாவூர் தேர் விபத்து - குடியரசுத் தலைவர் இரங்கல்! - tanjoore chariot accident

தஞ்சாவூர் தேர் விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் இறந்த சோகத்தை கூற வார்த்தைகள் இல்லை என குடியரசு தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தேர் விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் இரங்கல்!
தஞ்சாவூர் தேர் விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் இரங்கல்!

By

Published : Apr 27, 2022, 12:28 PM IST

டெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தேர் ஊர்வலத்தில் குழந்தைகள் உட்பட பலர் இறந்த சோகத்தை கூற வார்த்தைகள் இல்லை, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் வேகமாக குணமடைய பிரார்த்தனை செய்வதாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, இந்த செய்தியை கேட்டு பெரும் துயரமடைந்தேன், தற்போது அவர்களின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள பதிவில், ‘தஞ்சாவூரில் நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்' என தமிழில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தஞ்சாவூர் தேர் விபத்து!- அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details