தமிழ்நாடு

tamil nadu

மாற்றுத்திறனாளிகள் கல்விக்காக தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் - திரௌபதி முர்மு

By

Published : Dec 3, 2022, 5:01 PM IST

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2021-2022ஆம் ஆண்டுக்கான சிறந்த மாற்றுத்திறனாளி தேசிய விருதுகளை வழங்கினார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (டிசம்பர் 3) 2021-2022ஆம் ஆண்டுக்கான சிறந்த மாற்றுத்திறனாளி தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இந்த விழாவில் உரையாற்றிய முர்மு, ஐநா வின் புள்ளிவிவரங்கள்படி, உலகில் 100 கோடி பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது, நம்மில் 8 பேரில் ஒருவர் ஏதாவது ஒருவகையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இந்தியாவின் மக்கள்தொகையில் மொத்தம் 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

இவர்கள் யாரையும் சார்ந்திராமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. மாற்றுத்திறனாளிகள் கல்விக்காக தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்த வேண்டும். அவர்கள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது.

துணிவு, திறமை, திட்டமிடல் மூலம் தங்கள் இலக்கை எட்டி சாதனை படைத்த எண்ணிலா மாற்றுத்திறனாளி சகோதர-சகோதரிகளை உதாரணமாகக் கூற முடியும். அவர்கள் ஒவ்வொரு துறையிலும், சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 வலியுறுத்துகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்திய கடற்படை 2047ஆம் ஆண்டுக்குள் தற்சார்பாக மாறும் - கடற்படைத் தளபதி ஹரி குமார்

ABOUT THE AUTHOR

...view details