டெல்லி : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (அக்.1) தனது 76ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், “குடியரசுத் தலைவர் மாளிகை நாயகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் எளிமை, ஆளுமை காரணமாக அறியப்படுகிறீர்கள். தாய்திருநாட்டை நேசிக்கும் நீங்கள் சமூகத்தின் விளிம்பில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறீர்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “ராம்நாத் கோவிந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் எளிமை, உயர்ந்த நெறிமுறைகள் மற்றும் குறிப்பிடத்தக்க பார்வைக்கு பெயர் பெற்றவர். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல ஆண்டுகள் தேச சேவையில் ஆசீர்வதிக்கப்படட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவரின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு என் இதயப்பூர்வ பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :நடிகர் திலகத்தை கொண்டாடும் கூகுள்