குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள தனது சொந்த கிராமான பரௌங்க் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார்.
கடந்த 2017இல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர், ராம்நாத் கோவிந்த் தனது சொந்த ஊருக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
நெகிழந்த ராம்நாத் கோவிந்த்
சொந்த கிராமத்தில் அடியெடுத்து வைத்ததும், குடியரசு தலைவர் அந்த மண்ணைத் தொட்டு தலை வணங்கி மரியாதை செய்தார்.
பின்னர், கிராம மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், "தன்னைப் போன்ற எளிய பின்னணி கொண்ட கிராமத்தில் பிறந்த சிறுவன், பின்னாளில் நாட்டின் உச்ச பொறுப்புக்கு வந்துள்ளது, ஜனநாயகப் பண்பின் மேன்மையைக் காட்டுகிறது.
உங்களின் ஆசியும், ஆதரவுமே இந்த உயர்வுக்கு காரணம். கிராமத்தின் நினைவு என்றும், என் மனதை விட்டு நீங்காது.
மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதுவே தொற்றிலிருந்து தப்பிக்க வழி" என்றார்.
கிராமத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவரை உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்று, விழாவிலும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:லடாக் விரைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்!