குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்துள்ளார். இவர் பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராகவும், தேசிய துணை தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.
மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் - இல. கணேசன்
11:12 August 22
பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது புதிய ஆளுநராக இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌவுந்தரராஜனுக்கு தெலங்கானா மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவருக்கும் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
75 வயதை கடந்த இல.கணேசன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். தமிழ்நாடு அரசியலில் முக்கிய பங்கு கொண்டவர்.
இதையும் படிங்க:கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி