தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய மொழிகள் அனைத்துமே எனது தாய் மொழிகள் தான் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு! - முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி ஜிப்மரில் 17 கோடி ரூபாய் செலவில் நவீன கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் மற்றும் வில்லியனூரில் 10 கோடி ரூபாய் செலவில் ஆயுஷ்மான் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி
puduchery

By

Published : Aug 7, 2023, 8:28 PM IST

இந்திய மொழிகள் அனைத்துமே எனது தாய் மொழிகள் தான் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!

புதுச்சேரி: குடியரசு தலைவராக பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதுச்சேரி வந்தார். ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்த அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக ஜிப்மர் வளாகத்தில் அமைந்துள்ள ஏ.பி.ஜே அப்துல் கலாம் கலையரங்கத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து ஜிப்மரில் ரூ.17.01 கோடி மதிப்பீல் புதிதாக புற்றுநோய்க்கான உயர்தர கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை (Linear Accelerator) உபகரணத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனையடுத்து 10 கோடி ரூபாய் செலவில் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க:மணிப்பூர் கலவரம்.. ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு விசாரணை... உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, குடியரசுத் தலைவரின் மொழியான ஒடியா மொழியில் வாழ்த்தி வரவேற்றார். பின்னர் தமிழில் உரையாற்றினார். அப்போது கவிதை வாசித்து குடியரசுத் தலைவரை வாழ்த்தினார். 'அவர், வாரிசாக பதவிக்கு வரவில்லை. உழைப்பால் பதவிக்கு வந்தவர். குலமகள் குடியரசுத் தலைவராக உயர்ந்துள்ளார். பிரதமர் கண்டு எடுத்த மாணிக்கம்' என தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு புகழாரம் சூட்டினார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, 'நாட்டில் படிப்பறிவு பெற்றவர்களின் பட்டியலில் புதுச்சேரி முதலிடம் வகிக்கிறது. உயர் கல்வி சிறந்த முறையில் கற்பிக்கப்படுவது மகிழ்வை ஏற்படுத்துகிறது. ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரில் இந்த அரங்கு அமைந்துள்ளது. ராணுவத்திற்கும் மருத்துவத்திற்கும் அப்துல் கலாம் ஆற்றியப் பணி என்பது பாராட்டத்தக்கது' என்று கூறினார்.

''புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனையில் ஆயுர்வேதா, சித்தா, ஓமியோதி மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட இருப்பது வரவேற்கத் தக்கது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒடியா மொழியில் வரவேற்றாலும், இந்தியாவின் அனைத்து மொழிகளுமே எனது தாய் மொழிகள் தான்'' என்றார்.

இதையும் படிங்க:மணிப்பூர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்.. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க திட்டம் எனத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details