தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"பாரத் குடியரசுத் தலைவர் - மாநிலங்களின் ஒன்றியத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்" - காங்கிரஸ் கண்டனம்! - President of Bharat invitation to g20

President of Bharat : ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டு இருப்பது மாநிலங்களின் ஒன்றியத்திற்கு ஏற்பட்டு உள்ள அச்சுறுத்தல் என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

Bharat
Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 12:51 PM IST

ஐதராபாத் :. ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகளை ஒன்றிணைத்த ஜி20 அமைப்பிற்கு நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்த அமைப்பின் ஆண்டுக் கூட்டம் நடப்பாண்டில் இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழ் தான் தற்போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "அரசியல் சாசனத்தின் ஒன்றாவது பிரிவில் உள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள இந்திய தேசிய வளர்ச்சிகான ஒருங்கிணைந்த கூட்டணியை பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு வெளியானது முதலே நாட்டின் பெயர் பாரத் என்பதையே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குடியரசுத் வழங்கப்பட்ட அழைப்பிதழில் பாரத் என குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இதையும் படிங்க :Teachers Day : ஆசிரியர் தினம்! அணையா விளக்காய் ஒளிவீசும் ஆசிரியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details