தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவின் வளர்ச்சியில் ஆந்திரா முக்கியப் பங்காற்றுகிறது - திரௌபதி முர்மு

By

Published : Dec 4, 2022, 5:57 PM IST

இந்தியாவின் வளர்ச்சியில் ஆந்திர மாநிலம் முக்கியப் பங்காற்றுவதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

அமராவதி:ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் விஜயவாடாவில் இன்று (டிசம்பர் 4) நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் முர்மு பேசுகையில், எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த ஆந்திர மாநில அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, வம்சத்ரா, நாகவல்லி போன்ற நதிகளை ஆந்திர மாநிலம் பெற்றுள்ளது.

இந்த நதிகளைப் பாதுகாப்பதுடன், அதன் தூய்மையை உறுதிசெய்ய வேண்டியது அனைவரின் கடமை. பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில், முன் உதாரணமாகத் திகழும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல பெண்கள், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீராங்கனையான சரோஜி நாயுடுவின் வீரத்தை ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த காலங்களில் எப்போதும் நினைவில் கொண்டிருந்தேன்.

அதேபோல, ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளான அல்லூரி சீதாராம ராஜூ, பகவான் பிர்ஷா முண்டா ஆகியோர் தாய்நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்ததை இளைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம், இந்தியாவின் வளர்ச்சியில் ஆந்திர மாநிலம் முக்கியப் பங்காற்றுகிறது. உயிரி, வேதியியல் மற்றும் மருந்தக துறையில் மருத்துவர் எல்லபிரகாடா சுப்பாராவ்வின் அளப்பரியப் பங்களிப்பு, பல மருந்துகள் உற்பத்திக்கு வித்திட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில், ஆந்திர மக்கள், தங்கள் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்திய கடற்படை தினத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ

ABOUT THE AUTHOR

...view details