டெல்லி:இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. மாநிலங்களவை, மக்களவையின் கூட்டுக்கூட்டத்தொடரில் தனது முதல் உரையை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் முறை ஒழிப்பு ஆகியவை மத்திய அரசின் பாரட்டத்தக்க முடிவாக உள்ளதாக நான் பார்க்கிறேன்.
உலகில் எங்கு அரசியல் மந்தம் நிலவுகிறதோ, அங்கு அந்த நாடு நிலைகுலைகிறது. ஆனால், நமது அரசின் தீர்க்கமான முடிவுகளால் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியா பல்வேறு விதங்களில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழியாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.