தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர்! - குடியரசு தலைவர் மாளிகை

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இன்று செல்கிறார்.

குடியரசு தலைவர்
குடியரசு தலைவர்

By

Published : Feb 4, 2021, 2:05 PM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இன்று மாலை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "குடியரசுத் தலைவர் இன்று மாலை பெங்களூரு செல்லவுள்ளார்.

பயணத்தின் ஒரு அங்கமாக, யலேஹங்கா வான்படை நிலையத்தில் நடைபெறவுள்ள ஏரோ இந்தியா-21 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார். பின்னர், மடிகேரி, குடகு ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் அவர், ஜெனரல் திம்மையாவின் சொந்த ஊரில் அருங்காட்சியகத்தைத் தொடங்கிவைக்கவுள்ளார்.

பிப்ரவரி 7ஆம் தேதி, ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். ஆந்திரப் பிரதேசம் மதனப்பள்ளியில் உள்ள சத்சங் பவுண்டேஷனுக்குச் செல்லவுள்ளார். இறுதியாக, சாதுமில் உள்ள பீப்பல் குரோவ் பள்ளிக்குச் சென்று அங்கிருந்து டெல்லிக்குச் செல்லவுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details