நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(நவ.8) நடைபெற்றது. மொத்தம் 141 பேருக்கு 2020 ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
மறைந்த பாஜக மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பெற்றார்.
முன்னணி இந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் சன்னுலால் மிஸ்ராவுக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு பத்ம பூஷண் விருதும், இந்திய மகளீர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மூத்த விஞ்ஞானி ரமன் கங்கா கேத்கர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் விழாவில் வழங்கப்பட்டது.
திரைக் கலைஞர்களில் நடிகை கங்கனா ரானாவத், இசையமைப்பாளர் அத்னான் சமி ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பத்ம விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜகன்நாதன் பத்ம விருதில் தமிழ்நாடு
கீழ்கண்டவர்கள் தமிழ்நாட்டிலிருந்து 2020 பத்ம விருதுகளை பெறுகின்றனர்.
- கிருஷ்ணம்மாள் ஜகன்நாதன் - சமூகப் பணி - பத்ம பூஷண்
- வேணு சீனிவாசன் - வர்த்தகம் மற்றும் தொழில் - பத்ம பூஷண்
- லலிதா, சரோஜா சகோதரிகள் - கலை - பத்மஸ்ரீ
- மனோகர் தேவதாஸ் - கலை - பத்ம ஸ்ரீ
- எஸ் ராமகிருஷ்ணன் - சமூகப் பணி - பத்ம ஸ்ரீ
- மஹ்பூப் தம்பதிகள் - கலை - பத்ம ஸ்ரீ
- பிரதீப் - அறிவியல் - பத்ம ஸ்ரீ
இதையும் படிங்க:பணமதிப்பிழப்புக்கு பின்னும் உயர்ந்து வரும் ரூபாய் நோட்டுகளின் புழக்கம்!