தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஈகைத் திருநாள் - இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து...! - நல்லிணக்கமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க மக்களை ஊக்குவிக்கிறது ரமலான்

ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

President
President

By

Published : May 2, 2022, 10:33 PM IST

நாடு முழுவதும் நாளை(3/5/2022) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டில் உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "புனித ரம்ஜான் மாதத்தில், இஸ்லாமியர்கள் நோன்பிருந்து சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள். ரம்ஜான் மாதம் நிறைவடைவதையொட்டி ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில், ஏழைகளுக்கு உணவளிக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த பண்டிகை ஒரு அமைதியான, நல்லிணக்கமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க மக்களை ஊக்குவிக்கிறது.

ஈகைப் பெருநாளில், மனித நேய சேவைக்கு நம்மை அர்ப்பணிக்கவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உறுதி ஏற்போம். ஈகைத் திருநாளில், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காஷ்மீரிலிருந்து கையெறிகுண்டுடன் பயணம்.. தமிழக ராணுவ வீரரிடம் விசாரணை...

ABOUT THE AUTHOR

...view details