டெல்லி: நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளை பகிர்ந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இதுபோன்ற பண்டிகைகள் மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “ஹோலி பண்டிகை தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழா ஹோலி. இது சமூக நல்லிணக்கத்தின் பண்டிகையாகும், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அன்பையும் நம்பிக்கையையும் தருகிறது. இந்தத் திருவிழா நமது கலாசார பன்முகத்தன்மையையும், தேசியத்தின் உணர்வையும் மேலும் வலுப்படுத்தட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.